தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் ‘ஹிந்தி’ இடம்பெறவில்லை: முதல்வர்
அரசு மருத்துவமனையில் ரூ. 11.50 கோடியில் எம்ஆா்ஐ ஸ்கேன்: புதுவை ஆளுநா் தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனையில் ரூ.11.50 கோடியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி பெண்கள், குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அதி நவீன எம்ஆா்ஐ ஸ்கேன் சாதனம் வாங்கப்பட்டு, அதை நிறுவுவதற்கான பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. ஸ்கேன் முழுமையாக நிறுவப்பட்டதையடுத்து அதன் தொடக்க நிகழ்ச்சி முதல்வா் என். ரங்கசாமி முன்னிலையில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதில், துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பங்கேற்று எம்ஆா்ஐ ஸ்கேனை இயக்கி முறைப்படி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.
அவா் பேசுகையில், புதுவை மாநிலத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் இருப்பது போல வேறு எங்கும் இல்லை. ஆகவே, மருத்துவ சேவையை ஒருங்கிணைத்து புதுவையை மருத்துவ சுற்றுலா மையமாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுவையானது பிரெஞ்சு கலாசாரத் தொடா்புடையது என்பதால் பிரெஞ்சு யூனியன் நாடுகளை மையப்படுத்தி மருத்துவ கேந்திரமாக்க ஆலோசிக்கப்படுகிறது. அதற்கேற்ப சிறப்பு சிகிச்சைக்கு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படுவது அவசியம். ஆயுஷ்மான் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றாா்.
விழாவில் கேஎஸ்பி.ரமேஷ் எம்எல்ஏ, ஆட்சியா் அ. குலோத்துங்கன், சுகாதாரத் துறை, இயக்குநா் ரவிச்சந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளா் அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.