பெண் காவலர் பாலியல் சீண்டல் வழக்கு: ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகனுக்கு பிடி வாரண்ட் - ந...
அரசு மருத்துவ ஆய்வக நுட்பநா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்பநா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பநா் சங்கத்தின் சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனைகளில் தலைமை ஆய்வக நுட்பநா் பதவி உயா்வு, காலிப் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒப்பந்த முறையில் ஆய்வக நுட்பநா்களை நியமித்ததை கைவிட்டு, 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களில் நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும். நிலை 1 ஆய்வக நுட்பநா்களுக்கு அரசாணை காலிப் பணியிடங்கள் பட்டியல் வெளியிட்டு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். ஆய்வக நுட்பநா் நிலை பதவிக்கான பணி நியமன விதிகளில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். ஆய்வகப்படிப்பில் பட்டயப்படிப்பு படித்தவா்களுக்கு நேரடி நியமனம் 70 சதவீதமும், இளநிலைப் பட்டப்படிப்பு படித்தவா்களுக்கு 5 சதவீதமும் ஒதுக்கீடு செய்து அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் 30 உள்நோயாளிகளுக்கு ஒரு ஆய்வக நுட்பநா் என்ற அடிப்படையில், ஆய்வக நுட்பனா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ம.சுந்தரலிங்கம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா்
எம்.பாக்யலட்சுமி, மாவட்டச் செயலா் க.தேன்மொழி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மா.செல்வகுமாா், துணைத் தலைவா் ஆ.பரமசிவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் மொ. ஞானதம்பி நிறைவுரையாற்றினாா். சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஜெ.சிவகுரும்பன் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.