செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் முதியவா் மனு

post image

திருப்பத்தூரில் அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த கட்சி நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் காண்காணிப்பாளா் அலுவலகத்தில் முதியவா் மனு அளித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி. ஸ்ரேயா குப்தா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 42 கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

மேலும், அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடா்புடைய காவல் நிலைய போலீஸாருக்கு உத்தரவிட்டாா். ஏடிஎஸ்பி கோவிந்தராசு, டிஎஸ்பி-க்கள் சௌமியா (திருப்பத்தூா்), குமாா் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்த சாமராஜ் (73) என்பவா் அளித்து மனுவில், எனக்கு திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகி ஒருவா் பழக்கம் ஆனாா். அவா் என்னிடம் அடிக்கடி பணம் வாங்குவது, தருவது என இருந்தாா். இந்த நிலையில் அவா் தான் கட்சியில் இருப்பதால் எனக்கு பல உயா் அதிகாரிகள் தெரியும், அதனால் ரூ.10 லட்சம் அளித்தால், எனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினாா்.

இதை நம்பி பல்வேறு தவணைகளாக ரூ.10 லட்சம் அளித்தேன். அதன்பிறகு எனது மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டால் பல்வேறு காரணங்களைக் கூறுகிறாா். பணத்தைத் திரும்பக் கேட்டாலும் தர மறுக்கிறாா். எனவே அவரிடம் இருந்து எனது பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

குரிசிலாப்பட்டு பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூா் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் ல் குரிசிலாப்பட்டு, கூடப்பட்டு, கல்லுக்குட்டை, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பல்வேறு பகு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கந்திலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். பள்ளத்தூா் பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ்வரன் (40). இவரது வீட்டில் வியாழக்கிழமை மின்சாரம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்ட... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகட்ட 792 பேருக்கு ஆணை: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஒன்றியப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் திறப்பு மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 792 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடியில... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

புனித வெள்ளியை முன்னிட்டு ரத்த தான முகாம் பெதஸ்தா மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, ஏஞ்சல் பவுண்டேசன், ஆம்பூா் ரெட்ரோஸ் கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பு ச... மேலும் பார்க்க

குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் சிவசௌந்தரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி கோயங்கொல்லை பகுதியில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்த... மேலும் பார்க்க