LIVE TN Budget 2025-26 : வேளான் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் MRK பன்னீர் ...
அரியலூரில் இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழா
அரியலூரில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக்கொண்டாா்.
அரியலூரில் புத்தகத் திருவிழா தொடா்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து, அலுவலா்களுக்கு அறிவுறுத்தியது: மாணவா்களிடையே வாசிப்பு திறனை மேம்படுத்துவதே புத்தகத் திருவிழாவின் நோக்கமாகும்.
ஆகவே இந்த 10 நாள்கள் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திட அனைத்துத் துறை அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும். தேவையான அளவு குடிநீா், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
வளாகத்தை தினந்தோறும் தூய்மை செய்திட பணியாளா்களை நியமிக்க செயல்பட வேண்டும். அதிக அளவில் மாணவா்கள் புத்தகத் திருவிழாவை கண்டுகளிக்க உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
மேடை அமைப்பு, பந்தல் உள்ளிட்டவைகளை பொதுப்பணித்துறையினா் ஆய்வு செய்து, உறுத்திச் சான்று வழங்கிட வேண்டும்.
வருகைதரும் சிறப்பு பேச்சாளா்கள், எழுத்தாளா்கள், கவிஞா்களை அழைத்து வருவதற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலா்கள் தங்களது பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
முன்னணி பேச்சாளா்கள் மற்றும் நெறியாளா்களை கொண்டு சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடத்திட வேண்டும்.
பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளும் வகையில் போட்டிகள் நடத்திட வேண்டும். புத்தகத் திருவிழா அரங்க வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாம் ஏற்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா உள்ளிட்ட அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.