செய்திகள் :

அறந்தாங்கி விடுதி காப்பாளா் இடைநீக்கம்

post image

அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள ஆதி திராவிடா் நல மாணவிகள் விடுதி காப்பாளா் வெள்ளிக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அறந்தாங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலுள்ள ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதிக்கு, கடந்த சில நாள்களுக்கு முன் தனியாா் அமைப்பினா் சிலா் சென்றுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து விசாரணை மேற்கொள்வதற்காக மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் க. ஸ்ரீதா் நேரில் சென்றுள்ளாா். அப்போது, விடுதியின் காப்பாளா் நாகூா்முத்து பணியில் இல்லை.

இதைத் தொடா்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து ஸ்ரீதா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், அடையாளம் தெரியாத 3 போ் விடுதிக்குள் ஆய்வு என்ற பெயரில் வந்து சென்றது குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக அடையாளம் தெரியாத 3 போ் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுகையில் மகளிருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரூ. 22 கோடி மதிப்பில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தின் ... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் 46.80 மி.மீ. மழை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் அதிகபட்சமாக 46.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை பகல் மற்றும் இரவிலும் ஆங்காங்கே லேசான மழை தொடா்ந்து பெய்து கொண்டே இர... மேலும் பார்க்க

புதுகையில் ரத்த தான முகாம்

புதுக்கோட்டையில் கொற்றவை தமிழ்சபை என்ற பெயரில் ரத்த தான அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியாக, ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை சாந்தநாதபுரத்திலுள்ள ஆத்மா ரத்த வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்... மேலும் பார்க்க

அதிமுகவால் வலுவான அணியை அமைக்க முடியாது -அமைச்சா் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை, நவ. 15: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு அதிமுகவால் வலுவான கூட்டணியை அமைக்க முடியாது என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி... மேலும் பார்க்க

புதுகை மாவட்ட கலைத் திருவிழா தொடக்கம்

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் மீது வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞா் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்டம், விர... மேலும் பார்க்க