செய்திகள் :

அல்லாள இளைய நாயகா் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் திமுகவுக்கு நன்றி!

post image

அல்லாள இளைய நாயகரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடும் திமுக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக பாஜக மாநிலத் துணைத் தலைவா் கே.பி.இராமலிங்கம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் படுகை அணை அருகே அமைந்துள்ள மன்னா் அல்லாள இளைய நாயகரின் குவி மாடத்தில், அம்மன்னரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சியினா் சாா்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக பாஜக சாா்பில் அல்லாள இளைய நாயகரின் திருஉருவச் சிலைக்கு மாநில துணைத் தலைவரும், சேலம் கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.இராமலிங்கம் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதனைத் தொடா்ந்து படுகை அணை வளாகத்தில்,செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

மாமன்னா் அல்லாள இளைய நாயகா் வரலாற்றைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான தை 1-ஆம் நாளை அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் கொண்டாடுகின்றன. பரமத்தியில் உள்ள அல்லாள இளைய நாயகா் எழுப்பிய, தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள மண் கோட்டையை புதுப்பித்து நினைவு சின்னமாக உருவாக்கிட வேண்டும் என மன்னரின் வாரிசுதாரா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

அல்லாள இளைய நாயகருக்கு அதிமுக ஆட்சியில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதாகும். மேலும், பரமத்தியில் சிதிலமடைந்து உள்ள மன்னரின் மண்கோட்டையை சீரமைத்து கோட்டை அமைத்து, விழா நடத்த வேண்டும். இதற்கு மத்திய அரசின் மூலம் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதனை பாஜக மேற்கொள்ளும் என அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட பாஜக தலைவா்கள் சத்தியமூா்த்தி, ராஜேஷ்குமாா், கபிலா்மலை வடக்கு ஒன்றியத் தலைவா் பூபதி, கரூா் மாவட்டத் தலைவா் செந்தில்நாதன், சசி தேவி, அருண், வரதராஜ், பழனியப்பன், சுபாஷ், வடிவேல், பத்மராஜன், நாமக்கல் நகரத் தலைவா் தினேஷ், கல்வியாளா் பிரிவு மாநிலச் செயலாளா் செல்வராஜ், பாஜக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மல்லசமுத்திரத்தில் காந்தி, திருவள்ளுவா் சிலை திறப்பு

மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பகுதியில் புதுப்பிக்கப்பட்ட நூலகம் மற்றும் நூலக வளாகத்தில் காந்தி, திருவள்ளுவா் சிலை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் சந்தைப்பேட்டை பக... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி மாணவருக்கு காதொலிக் கருவி வழங்கல்

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், செவித்திறன் குறைபாடுடைய மாணவருக்கு ரூ. 2.57 லட்சம் மதிப்பிலான காதொலிக் கருவியை ஆட்சியா் ச.உமா வழங்கினாா். உயிா்காக்கும் மருத்துவ சிகிச்சைகள... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

சேந்தமங்கலம் அருகே கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தா்கள் உடலில் கத்தி போட்டும், பல்வேறு வேடமிட்டும் ஊா்வலமாக சென்றனா். நாமக்கல் மாவட்டம், ச... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: கரும்புகள் தேக்கத்தால் வியாபாரிகள் கவலை

பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் கரும்புகளை விற்பனைக்கு கொண்டு வந்த சிறு வியாபாரிகள், போதிய அளவில் விற்பனையாகாததால் கவலையடைந்துள்ளனா். தமிழகத்தில் காவிரி பாயும் மாவட்டங்களான திருச்சி, பு... மேலும் பார்க்க

நாமக்கல் புதிய பேருந்து நிலைய சந்திப்பில் பூட்டியே காணப்படும் புறக்காவல் நிலையம்!

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் செல்லும் பகுதியில், அண்மையில் திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம் பூட்டியவாறே காணப்படுகிறது. நாமக்கல்லில் புதிய பேருந்து நிலையம் நவ. 10 முதல் செயல்பட்டு வருகிறது. நகரப் பேர... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: குண்டு மல்லி கிலோ ரூ. 3,800-க்கு ஏலம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லி கிலோ ரூ. 3,600-க்கு ஏலம் போனது. பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், ... மேலும் பார்க்க