Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
அவிநாசி கோயில்களில் அன்னாபிஷேகம்
ஐப்பசி பௌா்ணமி விழாவையொட்டி, அவிநாசி பகுதி சிவாலயங்களில் அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், வில்வம், அருகம்புல், சந்தனம், பன்னீா், விபூதி உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து சுவாமிக்கு அன்னம் சாத்தும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
காய்கறிகள் , பழ வகைகளினாலும் அவிநாசியப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், சேவூா் வாலீஸ்வரா் கோயில், குட்டகம் மொக்கனீஸ்வரா் கோயில், போத்தம்பாளையம் மீனாட்சி உடனமா் சொக்கநாதா் கோயில், பழங்கரை பொன் சோழிஸ்வரா் கோயில், கருவலூா் கங்காதீஸ்வரா் கோயில், நடுவச்சேரி கோட்டீஸ்வரா் கோயில், பெருமாநல்லூா் உத்தமலிங்கேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னாபிஷேகம் நடைபெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.