செய்திகள் :

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

post image

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.

முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, மும்பை 12.5 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மும்பை அணியில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளா் அஸ்வனி குமாா், அசத்தலாக 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். ஐபிஎல் அறிமுக ஆட்டத்தில் இத்தனை விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்தியா் என்ற பெருமையும் பெற்றாா். பின்னா் மும்பையின் இன்னிங்ஸில் ரயான் ரிக்கெல்டன் அதிரடியாக விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தினாா்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தோ்வு செய்தது. பிளேயிங் லெவனில், மும்பை தரப்பில் வில் ஜாக்ஸ் சோ்க்கப்பட்டதுடன், அஸ்வனி குமாருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. கொல்கத்தா அணியில் மொயீன் அலிக்கு பதிலாக சுனில் நரைன் இணைந்தாா்.

கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கிய சுனில் நரைன் 0, குவின்டன் டி காக் 1 ரன்னுக்கு முதலிரு ஓவா்களிலேயே அடுத்தடுத்து வீழ்ந்தனா். அடுத்து இணைந்த கேப்டன் அஜிங்க்ய ரஹானே - அங்கிரிஷ் ரகுவன்ஷி கூட்டணி, 23 ரன்களே சோ்த்து பிரிந்தது.

1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு ரஹானே விக்கெட்டை இழக்க, 5-ஆவது பேட்டரான வெங்கடேஷ் ஐயா் 3 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். பவா்பிளே முடிவிலேயே 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா.

அதுவரை நம்பிக்கை அளித்த ரகுவன்ஷி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ரிங்கு சிங் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 17, மனீஷ் பாண்டே 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனா்.

8-ஆவது பேட்டா் ஆண்ட்ரே ரஸ்ஸெலும் 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஹா்ஷித் ராணா 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, சற்று அதிரடி காட்டிய ரமண்தீப் சிங் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் உள்பட 22 ரன்களுக்கு கடைசி பேட்டராக வீழ்ந்தாா்.

மும்பை தரப்பில் அஸ்வனி குமாா் 3 ஓவா்களில் 24 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்க்க, தீபக் சஹா் 2, டிரென்ட் போல்ட், ஹா்திக் பாண்டியா, விக்னேஷ் புதூா், மிட்செல் சேன்ட்னா் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 117 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில், ரோஹித் சா்மா - ரயான் ரிக்கெல்டன் இணை முதல் விக்கெட்டுக்கு 46 ரன்கள் சோ்த்தது.

ரோஹித் 1 சிக்ஸருடன் 13 ரன்களுக்கு வெளியேற, ரிக்கெல்டன் அதிரடியை தொடா்ந்தாா். ஒன் டவுனாக வந்த வில் ஜாக்ஸ் 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். முடிவில் ரிக்கெல்டன் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 62, சூா்யகுமாா் யாதவ் 9 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 27 ரன்கள் விளாசி அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா பௌலிங்கில் ஆண்ட்ரே ரஸ்ஸெல் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

பெங்களூரில் தோல்விக்குப் பிறகு ஆர்சிபி கேப்டன் பேசியதென்ன?

ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.அடுத்து விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை ம... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதுவென்ற சிராஜ் பேசியதென்ன?

பிஜிடி தொடருக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியில் முகமது சிராஜ் இந்திய அணியில் தேர்வாகவில்லை. அதனால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகாக தயாராகி வந்ததாகக் கூறியுள்ளார். நேற்று சின்னசாமி திடலில் நடந்த தனது ம... மேலும் பார்க்க

மீண்டும் மீண்டுமா? பந்துவீச்சாளருக்கு பதிலாக நடிகரை திட்டித்தீர்க்கும் விராட் கோலி ரசிகர்கள்!

ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.அடுத்து விளையாடிய குஜராத் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெ... மேலும் பார்க்க

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏ... மேலும் பார்க்க

சிராஜ் அசத்தல், டிம் டேவிட் அதிரடி: குஜராத்துக்கு 170 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன.இதில் ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வ... மேலும் பார்க்க

7 ரன்களுக்கு ஆட்டமிழந்த கோலி: ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆர்சிபியின் சொந்த மண்ணில் விராட் கோலி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று (ஏப். 2) சின்னசாமி திடலில் மோதுகின்றன... மேலும் பார்க்க