செய்திகள் :

அஸ்வினுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்ட இளம் ஆல்ரவுண்டர்!

post image

ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதையும் படிக்க: இதுதான் ஒரே வழி... பும்ராவை எதிர்கொள்ள ஆஸி. வீரர்களுக்கு முன்னாள் வீரர் கொடுத்த அறிவுரை!

தனுஷ் கோட்டியான் அணியில் சேர்ப்பு

யாரும் எதிர்பாராத விதமாக ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு முடிவை அறிவித்த நிலையில், அவருக்குப் பதிலாக பார்டர்- கவாஸ்கர் தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தனுஷ் கோட்டியான் (கோப்புப் படம்)

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய இந்தியா ஏ அணியில் தனுஷ் கோட்டியான் இடம்பெற்றிருந்தார். விஜய் ஹசாரே தொடரில் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் அண்மையில் தனுஷ் கோட்டியான் மும்பை அணிக்காக 2 விக்கெட்டுகள் மற்றும் 39 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: இந்திய அணியில் பந்துவீச்சு வலுவாக இல்லை: புஜாரா

தனுஷ் கோட்டியான் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அவர் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக அணியில் அக்‌ஷர் படேல் சேர்க்கப்படுவதாக இருந்தது எனவும், அக்‌ஷர் படேல் ஓய்வு கேட்டதால் தனுஷ் கோட்டியான் அணியில் சேர்க்கப்பட்டார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுவரை 33 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள தனுஷ் கோட்டியான் 1,525 ரன்கள் மற்றும் 101 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விராட் கோலி, பும்ராவை பார்க்க விரும்பும் முன்னாள் வீரர்!

தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவை பார்க்க விரும்புவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்டு தெரிவித்துள்ளார்.தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரின் மூன்றா... மேலும் பார்க்க

சாம்பியன் டிராபிக்கான அணி தேடல்! அதிரடி காட்டும் நட்சத்திர வீரர்கள்!

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதனால், ஏற்கனவே இந்திய அணியில் விளையாடிவர்களும், இளம்வீரர்களும் அதிரடியாக விளையாடிவருகின்றன.32-வது விஜய் ஹசாரா கோப்பை ஒர... மேலும் பார்க்க

விரைவில் சாம்பியன்ஸ் டிராபி; ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றிய பாகிஸ்தான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றியது.பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது... மேலும் பார்க்க

பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தி! -மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர்

பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தியடைந்துள்ளதாக மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் வருகிற டிசம்பர் 26 ஆம் ... மேலும் பார்க்க

முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லை; இந்திய அணிக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி!

முகமது ஷமி முழு உடல்தகுதியுடன் இல்லாததால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணியுடன் இணையமாட்டார் என்பதை பிசிசிஐ இன்று உறுதிப்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ... மேலும் பார்க்க

பிப்.23-ல் இந்தியா- பாக். மோதல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடுத்தாண்டு பிப்.23 ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, லாகூர், கராச்சி ஆகிய மைதானங்கள... மேலும் பார்க்க