ஆகஸ்ட் வெளியீடாகக் கூலி?
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: வீர தீர சூரன் வெளியீட்டுத் தேதி இதுதானா?
இதற்காக, ரஜினிகாந்த் நேற்று தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். அங்கு, முக்கியமான சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.
இந்த நிலையில், கூலி திரைப்படத்தை இந்தாண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 10 ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி வெளியாவதால் சூர்யாவின் ரெட்ரோ, தனுஷின் இட்லி கடை மே மாத வெளியீடாகத் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.