ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம்: சூர்யகுமார் யாதவ்
ஆசிய கோப்பையில் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என இந்திய டி 20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை போட்டிகளில் இன்று தொடங்குகிறன. இந்தியா தனது முதல் போட்டியில் யுஎஇ அணியுடன் நாளை (செப்.10) மோதவிருக்கிறது.
ஆசிய கோப்பை டி20 போட்டிகள் இன்று முதல் தொடங்கி செப்.28ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:
களத்தில் ஆக்ரோஷம் என்பது எப்போதும் இருக்கும். வெற்றிபெற வேண்டுமானால் ஆக்ரோஷம் இல்லாமல் முடியாது.
எங்களுக்கு நல்ல பயிற்சி ஆட்டம் கிடைத்தது. ஆசிய கோப்பையில் நல்ல அணிகளுடன் விளையாட இருக்கிறோம்.
முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் யுஎஇ நன்றாக விளையாடினார்கள். ஆசிய கோப்பையில் குறிப்பிட்ட வகையில் சாதிப்பார்கள் என்றார்.