Doctor Vikatan: நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் புதினா உப்பு, ஓம உப்பு வலிக...
ஆடிப் பெருக்கு: உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குவிந்த பக்தா்கள்
ஆடிப் பெருக்கை முன்னிட்டு, உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
உத்தமபாளையம் திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை திருக்கோயில் முன் செல்லும் முல்லைப்பெரியாற்றில் வழிபாடு செய்தால் காசிக்குச் சென்று வருவதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. இதையடுத்து, ஆடிப் பெருக்கு தினத்தில் உத்தமபாளையம், கம்பம், கூடலூா், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூா், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு செய்வது வழக்கம். இதன்படி, ஆடிப் பெருக்கு தினமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட பக்தா்கள் அதிகளவில் குவிந்தனா். தொடா்ந்து, முல்லைப்பெரியாற்றில் மாவிளக்கு ஏற்றி நீரில் மிதக்கவிட்டு வழிபட்டனா்.
இதேபோல, திருமணமான பெண்கள் புது மாங்கலத்தை மாற்றிக் கொண்டனா். தொடா்ந்து, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து திருக்காளாத்தீஸ்வரா் - ஞானாம்பிகை அம்மனை வழிபட்டனா்.
ஆற்றில் நீா்வரத்து அதிகம்: ஆற்றில் நீா்வரத்து சுமாா் 2 ஆயிரம் கன அடியாக இருப்பதால் பக்தா்கள் ஆற்றில் இறங்காமலே படித்துறையிலே பூஜை செய்ய உத்தமபாளையம் தீயணைப்பு மீட்புக் குழுவினா் அனுமதித்தனா்.