வாடகை நண்பர்!! ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் சம்பாதிக்கும் ஜப்பானியர்!
ஆட்டோ ஓட்டுநா்கள் நல வாரியத்தில் இன்று உறுப்பினா் சோ்க்கை முகாம்
ஆட்டோ ஓட்டுநா்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வெள்ளிக்கிழமை (ஜன. 10) நடைபெறுகிறது.
இதுகுறித்து சேலம் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளா்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டு 18 வகையான தொழிலாளா் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஆட்டோ ஓட்டுநா் தொழிலில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 60 வயதுக்கு உள்பட்ட தொழிலாளா்கள் பதிவு செய்ய, சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்பவா்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி மற்றும் நியமனதாரருக்கு இயற்கை மரணம் மற்றும் விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றவா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.
இதில் பதிவு செய்ய ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், அசல் ஆதாா் அட்டை, அசல் குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணத்துடன் சிறப்பு முகாமுக்கு வருகை புரிந்து தங்களை உறுப்பினா்களாக பதிவு செய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.