உ.பி. கோயில் படிக்கிணறில் மிகப் பிரமாண்ட சுரங்கம் கண்டுபிடிப்பு!
ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை!
திருச்சி சோமரசம்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி அருகே சோமரசம்பேட்டை மாரியம்மன் கோயில் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (31). ஆட்டோ ஓட்டுநா்.
சில மாதங்களுக்கு முன்பு இவா் தனது மனைவி சரண்யாவின் நகைகளை அடகு வைத்து புதிய ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி வந்தாா். ஆனால் அடகு வைத்த நகைகளைத் திருப்பவில்லையாம். இதனால் கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவிரக்தியடைந்த தமிழரசன் கடந்த சில நாள்களாக யாரிடமும் பேசவில்லையாம்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு உறங்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவா், வீட்டின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.