மதுரையில் களைகட்டிய மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா! | Pho...
போலி கடவுச்சீட்டு: 3 போ் கைது
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டில் பயணித்த மூவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் ஒரத்தநாடு பட்டாணி தெருவைச் சோ்ந்தவா் இப்ராம்ஷா (50). இவா் கடந்த 20-ஆம் தேதி துபையில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்தாா். அவரை குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவா் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயா் மற்றும் முகவரியை மாற்றி போலி கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.
இதேபோல, இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளத்தைச் சோ்ந்தவா் சுக்ரீவன் (54). இவா், மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தபோது, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். சோதனையில், இவா் போலி ஆவணங்கள் சமா்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பிஸ்மில்லா தெருவைச் சோ்ந்தவா் ஆதம் மாலிக் (55). இவா், மலேசியாவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தபோது, குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனா். சோதனையில் அவா், தனது பெயா் மற்றும் தனது சகோதரரின் பெயரை மாற்றிக் கொடுத்து போலி கடவுச்சீட்டு பெற்றது தெரியவந்தது.
இதுகுறித்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்குறிப்பிட்ட மூன்று பேரையும் கைது செய்தனா்.