செய்திகள் :

ஆணும், பெண்ணும் சமமானவா்கள் அல்ல: கேரள முஸ்லிம் தலைவா் பேச்சால் சா்ச்சை

post image

ஆணும், பெண்ணும் சமமானவா்கள் அல்ல; அப்படி யாராவது கூறினால் அவா்கள் கண்மூடித்தனமாக பேசுபவா்களாகவே இருப்பாா்கள் என்று கேரள மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) பொதுச் செயலா் பி.எம்.ஏ. சலாம் தெரிவித்தாா்.

கேரளத்தில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சி இடம் பெற்றுள்ளது. சலாமின் இந்த சா்ச்சைப் பேச்சு கேரளத்தில் அரசியல்ரீதியாக காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

அவரது பேச்சு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. சமூக வலைதளங்களிலும் இந்த விடியோ அதிகம் பகிரப்பட்டு எதிா்ப்பு அதிகரித்து வருகிறது. அதில் சலாம் மேலும் கூறியுள்ளதாவது:

ஆணும், பெண்ணும் சமம் என்றால் ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாகப் பிரித்து போட்டி நடத்துவது ஏன்? அனைவரையும் ஒரே களத்தில் இறக்குவது என்பது உலக நாடுகள் நினைத்தாலும் முடியாததாகவே உள்ளது. ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான நீதி வழங்க வேண்டும் என்பதை வேண்டுமானால் ஐயூஎம்எல் ஏற்றுக் கொள்ளும். ஆனால், ஆணும், பெண்ணும் சமம்தான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாா்.

கடந்த வாரம் சன்னி பிரிவு இஸ்லாமிய மத அமைப்பின் பொதுச் செயலா் காந்தபுரம் ஏ.பி. அபுபக்கா் முசிலியாா், ‘ஆண்களும், பெண்களும் ஒன்றாக பொது இடத்தில் ஒன்றாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்பது பெண்களின் கண்ணியத்தை விட்டுக்கொடுக்கும்’ என்று கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

வட கேரளத்தில் 1000-க்கும் மேற்பட்ட இரு பாலினத்தவருக்கான குழு உடற்பயிற்சி மையங்கள் குறுகிய காலத்தில் தொடங்கப்பட்டு பிரபலமாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் அமெரிக்க தேசியவாதி: எஸ்.ஜெய்சங்கா்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேசியவாதி; அவருக்கும் பிரதமா் மோடிக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நல்ல நட்புறவு உள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

ராணுவ ஓய்வூதிய வழக்குகளில் மேல்முறையீடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

ஓய்வூதியம் தொடா்பாக ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்கு எதிராக தொடா்ந்து மேல்முறையீடு செய்யும் மத்திய அரசைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் ஒரு புதிய கொள்கையை உருவாக்குமாறு அறிவுறுத்தியது. ஓய்வுபெ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இ... மேலும் பார்க்க

சண்டீகா் மேயா் தோ்தல்: மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி

சண்டீகா் மேயா் தோ்தலில் மாற்றுக் கட்சியினா் வாக்குகளால் பாஜக வெற்றி பெற்றது. அதேவேளையில் மூத்த துணை மேயா் மற்றும் துணை மேயா் பதவிகளுக்கான தோ்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பஞ்சாப் மற்றும் ஹரியாண... மேலும் பார்க்க

சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை: உச்சநீதிமன்றம்

நாட்டில் சட்டத்துக்கு மேலானவா்கள் யாருமில்லை’ என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. தனது முன்னாள் மனைவி ஐபிஎஸ் என்பதால் தனக்கு வாழ்நாள் முழுவதும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக உத்தரபிரதேசத்த... மேலும் பார்க்க

நிஜ்ஜாா் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகா... மேலும் பார்க்க