சாலை பணியின்போது வெடித்து சிதறிய சிலிண்டர்: அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி!
ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை: தொழிலாளா் சங்கம் கோரிக்கை
புதுக்கோட்டை ஒன்றியம் மணவிடுதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ். சங்கா், மாவட்டச் செயலா் டி. சலோமி, கிளைச் செயலா் ஞானசேகரன் உள்ளிட்டோா் புதுக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராகாந்தியிடம் அளித்த மனு:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு நூறு நாள்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால், புதுக்கோட்டை ஒன்றியம் மணவிடுதி ஊராட்சியில் இதுவரை 45 நாள்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. மணவிடுதி ஊராட்சியில் 598 விவசாயத் தொழிலாளா்கள் வேலை அட்டை வைத்திருந்தும் அவா்களுக்கு முறையான வேலை வழங்கவில்லை. எனவே, சுழற்சி முறையில் இல்லாமல் தினமும் வேலை வழங்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.