செய்திகள் :

ஆதிக்கத்துக்கு முடிவு..! ஒயிட்வாஸ் ஆனது ஆஸ்திரேலியா!

post image

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வி தழுவியது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக வென்ற நிலையில், முதலாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதிய இரண்டாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி காலேயில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சரித் அசலங்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் நிசங்கா 6 ரன்களில் ஆட்டமிழக்க மதுஷகா 51 ரன்களும்(4 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) குஷல் மெண்டிஸ் 101 ரன்களும்(11 பவுண்டரி) விளாசினர்.

அவர்களுக்குப் பின்னர் வந்த அசலங்கா முதல் ஆட்டத்தைப் போலவே 6 பவுண்டரிகள், 3 சிக்ஸருடன் 78 ரன்களும் ஜனித் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 32 ரன்களும் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது.

இதையும் படிக்க.. அதிவேக 6000* ரன்கள்..! விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்!

வலிமையான ஆஸ்திரேலிய அணி எளிய இலக்கான 282 ரன்களை கடக்க தொடக்கம் முதலே திணறியது. இலங்கை சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் திணறிய ஆஸ்திரேலிய அணி 24.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 29 ரன்களும் விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிஷ் 22 ரன்களும் டிராவிஸ் ஹெட் 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்தியுள்ளது. மேலும் சொந்த மண்ணில் இலங்கை அணி வென்ற 7-வது தொடர் இதுவாகும்.

குஷல் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதையும், சரித் அசலங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

இதையும் படிக்க.. காயத்தில் இருந்து மீண்ட ரச்சின்! தொடக்க ஆட்டத்தில் விளையாடுவாரா?

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த ஷுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளார். 25 வயதாகும் ஷுப்மன் கில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளா... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு!

சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. பாது... மேலும் பார்க்க

கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ஷர்துல்!

இங்கிலாந்து கவுன்டி சாம்பியன்ஷிப்பில் எசெக்ஸ் அணிக்காக விளையாட இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் 95 போட்டிகளில் விளையாடியுள்ள ஷர்துல் தாகூரை, இந்தாண்டு தொட... மேலும் பார்க்க

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து மோதல்

கராச்சி/துபை: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 9-ஆவது சீசன், பாகிஸ்தானில் புதன்கிழமை (பிப். 19) தொடங்குகிறது.கராச்சியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் - நியூஸிலாந்து ... மேலும் பார்க்க

முதல் சதமடித்த பென் கரன்..! தொடரை வென்றது ஜிம்பாப்வே!

அயர்லாந்துக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் சாம் கரன், அவரது அண்ணன் பென் கரன் இருவரும் விளையாடி வருகி... மேலும் பார்க்க

மகளிர் பிரீமியர் லீக்: இறுதிக்கட்ட போட்டிகளை தவறவிடும் யுபி வாரியர்ஸ் வீராங்கனை!

மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகளில் யுபி வாரியர்ஸ் அணியில் பிரபல வீராங்கனை விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கிய... மேலும் பார்க்க