செய்திகள் :

மகளிர் பிரீமியர் லீக்: இறுதிக்கட்ட போட்டிகளை தவறவிடும் யுபி வாரியர்ஸ் வீராங்கனை!

post image

மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகளில் யுபி வாரியர்ஸ் அணியில் பிரபல வீராங்கனை விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையும் படிக்க: தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க பாபர் அசாம்தான் சரியான நபர்: முகமது ரிஸ்வான்

யுபி வாரியர்ஸுக்கு பின்னடைவா?

இலங்கை அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான சமாரி அத்தப்பத்து, யுபி வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக அவர் அறிவிக்கப்பட்டுள்ளதால், மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிக்கட்ட போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டன் அலீஸா ஹீலி காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடவில்லை. இந்த நிலையில், இறுதிக்கட்ட போட்டிகளில் சமாரி அத்தப்பத்து அணியில் இடம்பெறமாட்டார் என்பது யுபி வாரியர்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி; ஷிகர் தவான் கூறுவதென்ன?

பிப்ரவரி 26 ஆம் தேதி வரையிலான போட்டிகளில் சமாரி அத்தப்பத்து விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு முன்பாக யுபி வாரியர்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்று விளையாடும் ஒரே ஒரு நியூசிலாந்து வீராங்கனையான அமெலியா கெர், இந்த தொடர் முழுவதும் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்ஸ் டிராபி: ஷுப்மன் கில் சதம்! இந்தியா அபார வெற்றி!

துபை : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல... மேலும் பார்க்க

முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்... மேலும் பார்க்க

அதிவேக 11,000* ரன்கள்..! சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்... மேலும் பார்க்க

அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள்... மேலும் பார்க்க

முகமது ஷமி 5 விக்கெட்டுகள்; இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விள... மேலும் பார்க்க

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்.! வங்கதேச வீரர்கள் புதிய சாதனை!

6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்து வங்கதேச வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர். இந்தியா- வங்கதேசம் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்று வ... மேலும் பார்க்க