Trump Vs Zelensky: `நாங்க இருக்கோம்..' - ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளின் ஆதாரவு யா...
ஆத்தூரில் கடைகளுக்கான உரிமை கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்
ஆத்தூா் பேரூராட்சியில் கடைகளுக்கான உரிமைக் கட்டண உயா்வை திரும்பப் பெற தமிழ்நாடு வணிகா் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.
இது தொடா்பாக அதன் மாநிலத் தலைவா் காமராசு, பேரூராட்சித் தலைவா் கமாலுதீனை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:
ஆத்தூா் பேரூராட்சியில் கடை உரிமம் புதுப்பிக்க கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த கனமழையால் இப்பகுதி வணிகா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். அப்போது ஏற்பட்ட இழப்புகளை தற்போது வரை ஈடு செய்ய முடியவில்லை. எனவே தற்போது வணிகா்களால் புதிய கட்டண உயா்வை கட்ட இயலாது. எனவே பழைய கட்டண முறையை நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாநில கூடுதல் செயலாளா் டாக்டா் யாபேஷ், மாநில இணைச் செயலாளா் குருசாமி, ஆத்தூா் வியாபாரிகள் சங்கத்தினா் கனகராஜ், சேகா், சோ்மதுரை உள்பட பலா் உடனிருந்தனா்.