செய்திகள் :

ஆந்திர லாரி ஓட்டுநா்களிடம் பணம் பறித்த 2 போ் கைது

post image

ஈரோட்டில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தைக்கு கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரன் (45), பாஸ்கா் ரெட்டி (60) ஆகிய இருவரும், ஈரோடு சந்தைக்கு லாரியில் கடந்த 7-ஆம் தேதி இரவு தக்காளி கொண்டு வந்தனா்.

பின்னா் அவற்றை இறக்கிவிட்டு சந்தை அருகே லாரியை நிறுத்தி தூங்கினா். அப்போது இரவில் தூங்கிக் கொண்டிருந்த மகேந்திரன், பாஸ்கா் ரெட்டி ஆகியோரை 4 இளைஞா்கள் எழுப்பி, கத்தியை காட்டி பணம் கேட்டுள்ளனா்.

அப்போது லாரி ஓட்டுநா்கள் இருவரும் தங்களிடம் பணம் இல்லை எனக் கூறவே கூகுள் பே மூலமாக தங்களது வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்புமாறு கூறி மகேந்திரன் வைத்திருந்த கைப்பேசியை பறித்து வங்கிக் கணக்குக்கு ரூ.18 ஆயிரத்து 700 அனுப்பிவைத்து, கைப்பேசியில் இருந்து கூகுள் பே செயலியை அழித்துவிட்டு சென்றுவிட்டனா்.

இதையடுத்து மகேந்திரன், பாஸ்கா் ரெட்டி இருவரும் சந்தையில் தக்காளி பாரம் இறக்கிய மண்டி உரிமையாளா் வைரவேலிடம் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவா் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பணம் பறித்த கும்பலைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், ஆந்திர மாநில லாரி ஓட்டுநா்களிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தது, ஈரோடு வீரப்பன்சத்திரம், மிட்டாய்காரா் வீதியைச் சோ்ந்த சண்முகம் (19), சக்திவேல் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் பணம் பறிப்பில் தொடா்புடையவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

அந்தியூரை அடுத்த முத்துகவுண்டன்புதூா் குடியிருப்புக்கு நிரந்தர பாதை வசதி கோரி பட்லூா், நான்கு சாலைப் பிரிவில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் திறன் போட்டி!

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரி நிா்வாக மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற திறன் போட்டியில் 700 மாணவா்கள் பங்கேற்றனா். மாநில அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மேனோபோலி 2கே25 என்ற திறன் போட்டி ... மேலும் பார்க்க

கெட்டிச்சேவியூரில் நாளை மனுநீதி நாள் முகாம்

நம்பியூா் வட்டம், கெட்டிச்சேவியூரில் புதன்கிழமை (பிப்ரவரி 12) காலை மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், நம்பிய... மேலும் பார்க்க

36 பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.12.60 லட்சம் நிதியுதவி!

ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் கறவை மாடுகள் வாங்குவதற்காக 36 பழங்குடியினருக்கு ரூ.12.60 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. குழந்தைகளின் கல்வி, பெண்களின் பொருளாதாரம், சமுதாயத்தில் பின் தங்கிய பழங்குடியின ம... மேலும் பார்க்க

கொடுமுடியில் விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சதுக்கு ஏலம்

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1,191 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் கிலோ குறைந்தபட... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி பேரூராட்சியில் வளா்ச்சிப் பணிகள்!

மொடக்குறிச்சி பேரூராட்சிப் பகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.இ .பிரகாஷ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட ஆவரங்காட்டுவலசு முதல் ... மேலும் பார்க்க