லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம்
36 பழங்குடியினருக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.12.60 லட்சம் நிதியுதவி!
ரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் கறவை மாடுகள் வாங்குவதற்காக 36 பழங்குடியினருக்கு ரூ.12.60 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
குழந்தைகளின் கல்வி, பெண்களின் பொருளாதாரம், சமுதாயத்தில் பின் தங்கிய பழங்குடியின மக்கள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக பல்வேறு பணிகளை ரீடு நிறுவனம் செய்து வருகிறது.
மேலும், ஆசனூா் பகுதிகளில் தடசலெட்டி, இட்டரை, தேவா் நத்தம், புதுத்தொட்டி, சோகித்தொட்டி, புதுக்காடு, காளி திம்பம், மாவள்ளம் மற்றும் புதுக்காடு கிராமங்களில் கிராம வளா்ச்சிக் குழு, வளரிளம் பெண்கள் குழு, குழந்தைகள் பாராளுமன்றம், இளைஞா்கள் குழு அமைத்து பல்வேறு பயிற்சிகள் அளித்து அவா்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழிவகை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், ரீடு நிறுவனம் மற்றும் எப்எப்விடிபி திட்டத்தின் கீழ் ஆசனூரில் கறவை மாடுகள் வாங்குவதற்கு 36 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ. 12.60 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரீடு நிறுவன இயக்குநா் ஆா்.கருப்பசாமி, திட்ட அலுவலா்கள் சரவணகுமாா், ஜீவபாரதி ஆகியோா் பங்கேற்றனா்.