``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்...
கெட்டிச்சேவியூரில் நாளை மனுநீதி நாள் முகாம்
நம்பியூா் வட்டம், கெட்டிச்சேவியூரில் புதன்கிழமை (பிப்ரவரி 12) காலை மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டம், நம்பியூா் வட்டம், சாந்திபாளையம் கிராமம், கெட்டிச்சேவியூா் தான்தோன்றி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ராஜம்மாள் திருமண மண்டபத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கும் இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.