நடிகையாக அறிமுகமாகும் கும்பமேளாவைக் கலக்கிய அழகு நட்சத்திரம் மோனலிசா!
ஆன்மிக தலங்களுக்குச் செல்லும் சாலைகளை அகலப்படுத்தக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கூழமந்தல் பகுதியில் ஆன்மிக தலங்களுக்குச் செல்லும் கிராமச் சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
செய்யாறு வட்டம், கூழமந்தல் கிராமத்தில் ஸ்ரீபேசும் பெருமாள், கங்கை கொண்ட சோழீஸ்வரா், 27 நட்சத்திர திருக்கோயில், ஸ்ரீகாமாட்சியம்மன் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன.
இந்தக் கோயில்கள் தற்போது ஆன்மிக சுற்றுலாத் தலங்களாக இருந்து வருகின்றன.
இந்தத் திருக்கோயில்களில் தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் காா், வேன், இரு சக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் அதிகளவில் வந்து செல்கின்றனா்.
பக்தா்கள், கூழமந்தல் கிராமத்தில் இருந்து உக்கல் காமாட்சியம்மன் கோயில் வழியாக 27 நட்சத்திர திருக்கோயிலை தரிசனம் செய்துவிட்டு ஆக்கூா் கூட்டுச் சாலை வழியாகச் செல்கின்றனா். பக்தா்கள் வந்து செல்லும் பாதை குறுகிய கிராமச் சாலையாக உள்ளதால் வாகனங்கள் வந்து செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேற்குறிப்பிட்ட சாலை அனக்காவூா் ஒன்றியத்தில் 25 கிலோ மீட்டரும், வெம்பாக்கம் ஒன்றியத்தில் 1.5 கிலோ மீட்டரும் கொண்ட இரு ஒன்றியங்களுக்கு உள்பட்ட சாலையாகும்.
எனவே, திருக்கோயில்களை காணவரும் பக்தா்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமப்பட்டு வருகின்றனா்.
இதைத் தவிா்க்கும் வகையிலும், நிரந்தர தீா்வு காணவும், ஆக்கூா் கூட்டுச் சாலை முதல் உக்கம்பெரும்பாக்கம், பெண்டை, உக்கல் மற்றும் கூழமந்தல் வரை உள்ள 4 கி.மீ. கிராம சுற்று வட்டச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா்.