செய்திகள் :

ஆபாசப் பதிவுகளுக்கு கட்டுப்பாடு: ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

post image

புது தில்லி : ஓடிடி தளங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக யுடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அநாகரிகமான, ஆபாசம் நிறைந்த பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு தரப்பிலிருந்து ஓடிடி தள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து, ஓடிடி தளங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஓடிடி தளங்கள் ஐடி சட்டங்கள் - 2021இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நன்னடத்தை நெறிமுறைகளுக்கு உள்பட்டு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள பதிவுகளை வெளியிடுவது குறித்து ஓடிடி தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு.

மேற்கண்ட தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை வயது ரீதியாக பகுத்து அவை அனைத்து வயதினரும் பார்ப்பதற்கு உகந்ததா என்பதை கவனத்திர்கோளவும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஏ சான்றிதழ் கொண்ட பதிவுகளை வெளியிடும்போது அதிக கவனம் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் செயல்படும் தன்னாட்சி நிறுவனங்கள் மேற்கண்ட தளங்களில் நன்னடத்தை விதிகளை மீறி செயல்படும்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஓடிடி தளங்கள் அநாகரீகமான, ஆபாசம் நிறைந்த மற்றும் பாலியல் பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் மக்கள் தரப்பிலிருந்தும் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி மூன்று மடங்கு அதிகமாக உழைக்கிறார்: மத்திய அமைச்சர்

கேரளத்தில் பாஜக வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.கொச்சியில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வர்த்தகம் மற்... மேலும் பார்க்க

சாலைகளிலுள்ள கழிவுகளை அகற்ற பொதுப்பணித்துறைக்குத் தில்லி அரசு உத்தரவு: ஆஷிஷ் சூட்

சாலைகளில் உள்ள சட்டவிரோத கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றத் தில்லி அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தில்லி அமைச்சர் ஆஷிஷ் சூட் தெரிவித்தார். இதுதொடர்பாக ஆஷிஷ் சூட் கூறுவதாவது, ரேகா குப்தாவ... மேலும் பார்க்க

பெற்றோர்களே உஷார்... குழந்தைகள் கண்காணிப்புக்கு நாளுக்கு ரூ. 10,000 சம்பளம்!

பெங்களூரில் பதின்ம வயது குழந்தைகளைக் கண்காணிப்பதற்கு தனியார் புலனாய்வு அதிகாரிகளை பெற்றோர்கள் நியமித்து வருவது சமீபகாலமாக அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரு... மேலும் பார்க்க

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா? இதைச் செய்யாவிட்டால் சிக்கல்தான்!

ஒருவர் ஆதார் கார்டு, பான் கார்டு வைத்திருப்பது போல ஜிமெயில் வைத்திருப்பதும் அத்தியாவசியமாகிவிட்ட இந்தக் காலத்தில், வெறும் ஜிமெயில் கணக்கைத் தொடங்கிவிட்டால் மட்டும் போதாது.அதனை முறையாக பராமரிக்கவும் வே... மேலும் பார்க்க

கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்து: 4 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்றவர்களின் கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் சனிக்கிழமை அதிகாலை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மா... மேலும் பார்க்க

மருத்துவமனை சிசிடிவி விடியோ வெளியான விவகாரம்: குற்றவாளிகளின் 22 டெலிகிராம் சானல்கள்!

மருத்துவமனையில் பெண்களை பரிசோதிக்கும் அறையில் இருந்த சிசிடிவியில் பதிவான விடியோக்களைத் திருடி அதனை விற்பனை செய்து வந்த சம்பவத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் மகாராஷ்டிரத்தில் இரண்டு பேரைய... மேலும் பார்க்க