தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கம்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்காவும் புறக்கணிக்கிறதா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி வலியுறுத்தியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபையில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடைபெறுகின்றன.
புறக்கணிக்க வலியுறுத்தல்
அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை தென்னாப்பிரிக்க அணி புறக்கணிக்க வேண்டும் என அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா?
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு பெண்களுக்கான விளையாட்டுகளுக்கு தடை விதித்துள்ளது. அந்த நாட்டின் மகளிர் கிரிக்கெட் அணியையும் தலிபான் அரசு கலைத்துவிட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சர் கேடான் மெக்கென்ஸி தெரிவித்துள்ளதாவது: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாட வேண்டுமா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கில்லை. இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் தென்னாப்பிரிக்கா விளையாடாது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இலங்கை டெஸ்ட் தொடரில் ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரர் யார்? ஜியார்ஜ் பெய்லி பதில்!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது.
முன்னதாக, பிரிட்டனைச் சேர்ந்த 160-க்கும் அதிகமான அரசியல்வாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கக் கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.