ஆமீர், சல்மான், ஷாருக்கான்... பாலிவுட் நட்சத்திரங்கள் 60 வயதிலும் இளமையாக இருக்க காரணம் என்ன?
சினிமாவிலும், விளையாட்டிலும் உடலை பிட்டாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் ஆமீர் கான், சல்மான் கான், ஷாருக்கான் ஆகியோர் 60 வயதை நெருங்கிவிட்டாலும் இன்னும் இளமையாகவே இருக்கின்றனர்.
இதற்காக பாலிவுட் நட்சத்திரங்கள் கடுமையான உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்றனர். ஷாருக்கான் தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள தினமும் ஒரு நேரம் மட்டுமே சாப்பிடுகிறார். அதிலும் அரிசி சோறு மற்றும் சப்பாத்தியை சாப்பாட்டில் எடுத்துக்கொள்வதில்லை. புரோட்டின் அதிக அளவில் இருக்கக்கூடிய சிக்கன் போன்ற அசைவ உணவுகள், முட்டை, உலர்ந்த பழங்களை அதிகமான உணவில் சேர்த்துக்கொள்கிறார்.

இதே போன்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேயின் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங்கும் அரிசி சோறு, சப்பாத்தியை தவிர்த்து சிக்கன், முட்டை, காய்கறிகள் மற்றும் புரோட்டின் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்கிறார். இதனால் அவரால் உடலை எப்போதும் பிட்டாக வைத்துக்கொள்ள முடிகிறது.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உணவு விவகாரத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கிறார். இரவு நேரத்தில் உணவை தவிர்த்து விடுகிறார்.
இரவு உணவை விரைவில் சாப்பிடும் அக்ஷய் குமார் சப்பாத்தி, அரிசி சோறு போன்றவற்றை தவிர்க்கிறார். அதோடு காய்கறிகள், புரோட்டின் சத்து நிறைந்த உணவுகள் அவரது சாப்பாட்டில் இடம் பெற்று இருக்கும்.

நடிகை சோனம் கபூர் எப்போதும் உணவில் சிறுதானியங்களை சேர்த்துக்கொள்வது வழக்கம். சப்பாத்தி மற்றும் அரிசி சோற்றை குறைவாக எடுத்துக்கொள்ளும் சோனம் கபூர் சோளத்தில் சமைக்கப்பட்ட உணவுகளை விரும்பி எடுத்துக்கொள்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் தனது உடலை பிட்டாக வைத்துக்கொள்ள காலையில் முட்டை, பழங்களை சாப்பிடுகிறார். மதியம் சிக்கன், மீன், காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
