மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான நாகேந்திரன் மருத்துமனையில் அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி நாகேந்திரனின் மருத்துவ அறிக்கையைச் சமா்ப்பிக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவா் ரெளடி நாகேந்திரன். வேலூா் சிறையில் இருந்த அவா் கல்லீரல் பிரச்னை காரணமாக கடந்த ஜூன் 7 முதல் 12-ஆம் தேதி வரை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த நிலையில், நகேந்திரனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களையும், அவருக்கு மேலும் என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என கேட்டு நாகேந்திரன் மனைவி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் நாகேந்திரனின் மருத்துவ அறிக்கையை ஜூலை 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கும்படி உத்தரவிட்டனா். இந்த உத்தரவை தொடா்ந்து, ரெளடி நாகேந்திரன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டாா்.