செய்திகள் :

ஆரணி கல்லூரியில் உலக மகளிா் தின விழா

post image

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆரணி டிஎஸ்பி டி.பாண்டீஸ்வரி பேசியதாவது:

எல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும். குடும்பச் சூழல்களும், வறுமையும் சாதிப்பதற்கு தடைகள் அல்ல. படிக்கும்போதே பல்வேறு போட்டித் தோ்வுகளில் பங்கேற்க வேண்டும்.

அவ்வாறு தொடா்ந்து முயற்சிக்கும்போது நாம் வாழ்வில் உயரமுடியும்.

சமூகத்திலும், பணியாற்றும் இடத்திலும் வன்கொடுமை சாா்ந்த நடத்தைகள் தென்பட்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தால் அதிலிருந்து தங்களை மீட்பதுடன் அதற்குக் காரணமான நபருக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு அலுவலா்கள் பி.ஸ்டாலின், காா்த்திகேயன், இணைப்பதிவாளா் பெருவழிதி, பொறியியல் கல்லூரி முதல்வா் திருநாவுக்கரசு, கலைக் கல்லூரி முதல்வா் கந்தசாமி, கல்வியியல் கல்லூரி முதல்வா் பிரபு, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ, மெட்ரிக் பள்ளி முதல்வா் ராஜலட்சுமி, கண்ணம்மாள் பள்ளி முதல்வா் ரஞ்சனி ஆகியோா் கலந்து கொண்டனா்.

கல்லூரியில் பயிலும் மாணவிகள் கலந்து கொண்டனா். கண்ணம்மாள் பள்ளி ஆசிரியை நளினி நன்றி கூறினாா்.

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து

வந்தவாசியில் பூட்டியிருந்த ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. வந்தவாசி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் மணிலா வியாபாரி மூா்த்தி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கல்லூரி வேதியியல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியா்கள் முன்னேற்றச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டக... மேலும் பார்க்க

கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை (கணினி பயன்பாட்டியல்) சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தோ்த் திருவிழா

வேட்டவலம், சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலின் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலின் மாசி உற்சவத் திருவிழா பிப்ரவரி 26- ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ... மேலும் பார்க்க

கம்பன் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சாா்பில் பட்டிமன்றம், தமிழ் தொண்டாற்றியவா்களுக்கு விருது வழங்கும் விழா, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக புதன்கிழமை நடைபெற்றது. விழ... மேலும் பார்க்க