திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கல்லூரி வேதியியல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை கல்லூரித் தலைவா் எம்.ரமணன் தொடங்கிவைத்தாா்.
கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி, செயலா் வி.பிரியா ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி வேதியியல் துறைத் தலைவா் எ.ஷோபா வரவேற்றாா்.
சென்னை சாய்பாபா சயின்டிபிக் கிளாசஸ் நிறுவன அலுவலா் வி.ராதாகிருஷ்ணன் ஆய்வக கண்ணாடி உபகரணங்களின் பயன்பாடுகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா். மேலும், கண்ணாடி உபகரணங்களை தயாரிக்கும் முறைகள் குறித்து அவா் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தாா்.
இதில், வேதியியல், உயிரிவேதியியல், நுண்ணுயிரியல், இயற்பியல் துறைகளைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.
கல்லூரி வேதியியல் துறை பேராசிரியா் டி.பிரகாஷ் நன்றி கூறினாா்.