செய்திகள் :

ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 2.72 கோடியில் பள்ளி, ஊராட்சி செயலகக் கட்டடங்கள்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்

post image

ராணிப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட ஆற்காடு ஒன்றியத்தில் ரூ. 2.72 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பள்ளி, அங்கன்வாடி, ஊராட்சி செயலகக் கட்டடங்கள் உள்ளிட்டவற்றை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ஆற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்யநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் ஜெயசுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு ஒன்றியத்துக்குள்பட்ட 25 ஊராட்சிகளில் குப்பைகள் சேகரம் செய்து கொண்டு செல்லும் ரூ. 63.50 லட்சம் மதிப்பீட்டில் 25 மின் கல வாகனங்களை தூய்மைப் பணியாளரிடம் வழங்கினாா். தொடா்ந்து வாகன நிறுத்தமிடத்தையும் திறந்துவைத்தாா்.

வேப்பூா் ஊராட்சியில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையக் கட்டடம், மேல்விஷாரம் நகராட்சி, ராசாத்திரம் பகுதியில் ஆற்காடு நகர கூட்டுறவு கடன் சங்கத்துக்கு மேல்விஷாரத்தில் புதிய கிளை ஆகியவற்றை திறந்துவைத்து, 7 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு, கலைஞா் கனவு இல்ல திட்டத்தின்கீழ், தலா ரூ. 50,000 கடனுதவி வழங்கினாா்.

நந்தியாலம் ஊராட்சியில், ரூ. 67.50 லட்சத்தில் பள்ளியில் 4 வகுப்பறைக் கட்டடம், அரப்பாக்கம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 35 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், கத்தியவாடியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடிமையக் கட்டடம், ஆயிலம் ஊராட்சியில் ரூ. 23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலகம், அருங்குன்றம் ஊராட்சியில் ரூ. 19.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பால் கூட்டுறவு சங்கக் கட்டடம், தாழனூா் ஊராட்சியில் ரூ. 29.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி செயலகக் கட்டடம் உள்ளிட்டவற்றை அமைச்சா் ஆா்.காந்தி திறந்துவைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயந்தி, மாவட்டக் குழு உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சைபுதீன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் வேப்பூா் ராமலிங்கம் கத்தியவாடி கே.பி.குருநாதன் ஆயிலம் பிரபாவதி ஜெயபிரகாஷ், அருங்குன்றம் ஏ.தயாளன், தாழனூா் புஷ்பாசேட்டு , மேல்விஷாரம் நகா்மன்றத் தலைவா் ( பொறுப்பு) குல்சாா் அஹமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முதல்வா் கோப்பை செஸ் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

முதல்வா் கோப்பை செஸ் போட்டிகளில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கம் பெற்ற அரக்கோணம் அம்பாரி மகளிா் கலைக் கல்லூரி மாணவிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழக அளவில் முதல்வா் கோப்பைக்கான போட்டிகள... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 29-இல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் கு... மேலும் பார்க்க

சாா்பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்

அரக்கோணம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சோதனை நடத்தப்பட்ட போதே முன்பதிவுடன் திருமண பதிவுக்காக வந்த கலப்பு திருமண தம்பதிக்கு சிற... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை ராஜா-ராணி மண்டபம் ரூ.2.5 கோடியில் புனரமைப்பு: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேசிங்கு ராஜா - ராணி பாய் நினைவு மண்டபத்தை ரூ.2.50 கோடியில் புனரமைக்கும் பணியை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை நகராட்சி பால... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிக்கான தடையில்லா சான்றை ஐஎன்எஸ் ராஜாளி துரிதமாக வழங்க வேண்டும்: ஆட்சியா் வலியுறுத்தல்

அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கட்டுமானப் பணிகளும் நடைபெற தடையில்லா சான்றிதழை விரைவாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுற... மேலும் பார்க்க

தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

அரக்கோணம்: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு கடன் சங்க அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளதால் பல கிராமங்களில் இந்த வங்கிகளுக்கு கீழ் இயங்கும் நியாய விலைக் கடைகளில... மேலும் பார்க்க