ஆலங்குளத்தில் 695 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை அளிப்பு
ஆலங்குளம், கீழப்பாவூா் ஒன்றியத்தில் கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ. 25.76 கோடியில் 695 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கப்பட்டது.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தலைமை வகித்தாா்.
ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் முன்னிலை வகித்தாா்.
ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூா் ஒன்றியங்களைச் சோ்ந்த 695 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டத்திற்கான ஆணைகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வழங்கிப் பேசினாா். இதில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமாா், எம்எல்ஏ சு. பழனி நாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.