செய்திகள் :

தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த கப்பல் மாலுமி கொலை

post image

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் மரடோனா. கப்பல் மாலுமியான  இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு கப்பலில் இருந்து விடுமுறைக்காக வந்தவர் வீட்டில் இருந்துள்ளார்.   இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு மரடோனா திரேஸ்புரம் பஜாரில் நின்று கொண்டிருந்த போது அங்கு மது போதையில் அதேபகுதியைச் சேர்ந்த மதன்குமார் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட கும்பல் வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

உயிரிழந்த கப்பல் மாலுமி மரடோனா

இதை மரடோனா தட்டி கேட்டதுடன் மெதுவாகச் செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளாராம்.  இதனைத்தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் திரேஸ்புரம் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்த மரடோனாவை மதன்குமார் தலைமையிலான 3 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் அவருக்கு தலை, கை, கால் மற்றும் தாடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.  இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மரடோனாவை  மீட்டு அருகில் இருந்தவர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் விருதுநகர் அருகே வைத்து மரடோனா பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் நடந்த கடற்கரை

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மதன்குமார் உள்ளிட்ட கும்பலை  வடபாகம் காவல்துறையினர் தேடி வருகின்றனர் . தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி: மதுபாட்டிலை மறைத்து வைத்த தோழி; ஆத்திரத்தில் கட்டையால் அடித்துக் கொன்ற இளைஞர்!

தூத்துக்குடி மாவட்டம், பண்டாரவிளையைச் சேர்ந்தவர் ஜெபா வைலட். இவர், தன் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில், இரண்டாவதாக அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவருடம் திருமணம் ஆகியுள்ளது. இந்த நிலையில... மேலும் பார்க்க

`போதைப்பொருள் சப்ளை, பாலியல் தொல்லை புகார்' - நடிகர் ஷைன் டோம் தாமஸ் சினிமாவில் நடிக்க தடை?

கேரள கொச்சி கலூரில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் விற்கும் கும்பல் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை இரவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார். அதில் போதைப்பொரு... மேலும் பார்க்க

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க