Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
ஆல் அவுட் ஆனாலும் 339 டார்கெட் வைத்த ஆஸ்திரேலியா; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா?
நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் நேற்று (அக்டோபர் 29) நடைபெற்ற முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென்னாப்பிரிக்கா.
இன்று இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், அதிக முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவும், அரை நூற்றாண்டாகக் கோப்பை வெல்லப் போராடிவரும் இந்தியாவும் மோதியது.

நவி மும்பையில் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், 6-வது ஓவரிலேயே கேப்டன் அலிசா ஹீலியை விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு நல்ல மொமென்ட்டம் உருவாக்கினார் கிராந்தி கவுட்.
ஆனால், அதை இந்தியா கெட்டியாகப் பிடித்துக்கொள்ளாததன் விளைவு ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எலிஸ் பெர்ரி கூட்டணி 150+ பார்ட்னர்ஷிப் போட்டது. ஒருகட்டத்தில் எலிஸ் பெர்ரி 77 ரன்களில் அவுட்டானாலும் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் சதமடித்து அச்சுறுத்தினார்.
இந்திய வீராங்கனைகள் ஒருவழியாக அவரையும் அவுட்டாக்கி, அடுத்து வந்த இருவரையும் அவுட்டாக்கியபோதும் அதன்பிறகு வந்த ஆஷ்லீ கார்ட்னர் அரைசதமடித்து ஆஸ்திரேலியாவை 300 ரன்களைக் கடக்க வைத்தார்.

இறுதியில் 49.5 ஓவர்களில் 338 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியானது.
339 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கும் இந்திய அணி மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
















