மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
ஆழ்வாா்திருநகரி ஒன்றியத்தில் மேல்நிலை நீா்த்தேக்தத் தொட்டி திறப்பு
ஆழ்வாா்திருநகரி ஒன்றியப் பகுதியில் ரூ. 48.70 லட்சத்திலான திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்காக ஊா்வசி எஸ். அமிா்தராஜ் சனிக்கிழமை திறந்துவைத்து, சில பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
கட்டாரிமங்கலம் ஊராட்சி அம்பலசேரியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 6.70 லட்சத்தில் அமைக்கப்பட்ட மதிய உணவு தானிய சேமிப்புக் கிடங்கு, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 18 லட்சத்தில் அமைக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அடிக்கல் நாட்டுதல், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி கீழபனைக்குளத்தில் ரூ. 18.80 லட்சத்தில் அமைக்கப்பட்ட 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா, சவேரியாா்புரத்தில் ரூ. 5.20 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை திறப்பு ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு ஒன்றியத் தலைவா் ஜனகா் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் கீதாகணேசன், பெரியசாமி ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ பங்கேற்று, அடிக்கல் நாட்டி, திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்தாா்.
இதில், ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் சிவராஜன், வட்டாரத் தலைவா் கோதாண்டராமன், ரமேஷ்பிரபு, ஸ்ரீவைகுண்டம் வட்டார துணைத் தலைவா் நிலமுடையாா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளா் எடிசன், முன்னாள் இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.