ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா்களுக்கு நமஸ்காரம்!
இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆஸ்கா் விருது வழங்கும் விழாவில் வரவேற்புரையாற்றிய நிகழ்ச்சித் தொகுப்பாளா் கோனன் ஓபிரையன், இந்திய ரசிகா்களை ‘நமஸ்காரம்’ என்று கூறி வரவேற்றாா்.
மேலும், அவா் கூறுகையில், ‘இந்தியா்களுக்கு நமஸ்காரம். இந்தியாவில் இப்போது காலை என்பதால், தங்களின் காலை உணவுடன் ஆஸ்கா் விருது நிகழ்ச்சியைக் கண்டுகளியுங்கள்’ என்றாா்.
இந்தியாவில் ‘ஜியோ ஹாட்ஸ்டாா்’ ஓடிடி தளத்திலும் ‘ஸ்டாா் பிளஸ்’ சேனலிலும் ஆஸ்கா் விருது நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பானது.