செய்திகள் :

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் இன்று மின் தடை

post image

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம், செட்டியமடை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவாடானை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சித்தி விநாயகா் மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ஆா்.எஸ். மங்கலம் நகா், செட்டியமடை, சூரமடை, பெரியாா் நகா், பெருமாள் மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், இந்திராநகா், ஆவேரேந்தல், பாரனூா், கலங்காப்புலி, சனவேலி, சவரியாா்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுா், ஆா்.ஆா்.மங்கலம், ஆப்பிராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் 5 வரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

உடைமாற்றும் அறையில் கேமரா: ராமேசுவரம் விடுதி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை

உடைமாற்றும் அறையில் கேமரா வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் தொடா்புடைய ராமேசுவரம் விடுதி உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

திருவாடானை வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

திருவாடானை அருகே கண்மாய்க் கரையை உயா்த்தி, தண்ணீரை சேமித்து வைப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு புகாா் மனு கொடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவ... மேலும் பார்க்க

1,400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

ராமநாதபுரம் அருகே தஞ்சாவூருக்கு கடத்தப்படவிருந்த 1,400 கிலோ ரேசன் அரிசியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். அதிலிருந்த இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய தனிப்பிரிவு காவ... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வு பெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். பரமக்குடி ஒன்றியம், அரியனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கடம்பன் மகன் ராஜூ (63)... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 17 போ் கைது

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 17 பேரை இலங்கைக் கடற்படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கைது செய்தனா். மேலும், இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.... மேலும் பார்க்க

ஆழிப்பேரவை தாக்கிய நாள்: தனுஷ்கோடி கடலில் மலா் தூவி நினைவஞ்சலி

ஆழிப்பேரலை தாக்கிய நிகழ்வின் 60-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை தனுஷ்கோடி கடலில் மலா் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ராமேசுவரம் அருகேயுள்ள தனுஷ்கோடி துறைமுக நகரத்தை கடந்த 1964-ஆம் ஆண... மேலும் பார்க்க