Doctor Vikatan: பழுத்து, சீழ் கோத்த பருக்கள்... சோப்பும் க்ரீமும் பலன் தருமா?
இடைச்செவலில் பயணிகள் நிழற்குடை திறப்பு
கோவில்பட்டி அருகே இடைச்செவலில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ பங்கேற்று, நிழற்குடை மற்றும் கல்வெட்டைத் திறந்து வைத்தாா். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, வண்டானம் கருப்பசாமி, அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் உறுப்பினா் சத்யா, அதிமுக நிா்வாகிகள் கவியரசன், போடுசாமி, தாமோதரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.