செய்திகள் :

இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை

post image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது,

’’தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நடந்துகொண்டிருக்கிறது. இதனை நான் கூறவில்லை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி உரிய மரியாதை கொடுத்தார். உப்புசப்பில்லாத காரணத்துக்காக திமுக போராட்டம் நடத்துகிறது.

ஆளுநருக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆபாசமாக சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. காவல் துறை வேடிக்கை பார்க்கிறது. இது தவறு இல்லையா? திமுகவுக்கு எதிராக நாங்கள் சுவரொட்டிகள் ஒட்டலாமா? ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம்; எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நியாயமா?

டங்ஸ்டன் சுரங்கம் வராது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து கூறுவதில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு என்ன பிரச்னை?

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என மத்திய அரசு கூறியுள்ளது என்பதை நான் கூறிக்கொள்கிறேன். அப்படி வந்தால், விவசாயிகளுடன் நாங்கள் போராட்டத்தில் வந்த் அமருவோம்.

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை திசைதிருப்ப ஆளுநரை பயன்படுத்துகிறது திமுக.

திமுகவுக்கு சாமரம் வீசி கம்யூனிச கட்சிகள் நீர்த்துப்போயுள்ளன. திமுக கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்ட் தோழர்கள் வெளியேற வேண்டும்.

இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குக்ள் 40 - 50 சதவீதத்தை தாண்டுமா? என்பது சந்தேகமாக உள்ளது. ஓராண்டுக்கான ஆட்சியாக இருந்தாலும் மக்கள் முழுமையாக வாக்களிக்க வேண்டும்’’ என அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்க | சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள்!

டங்ஸ்டனுக்கு எதிராக அமைதிப் பேரணியில் ஈடுபட்ட 5000 பேர் மீது வழக்குப்பதிவு!

மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.காவல்துறையினரின் அனுமதியின்றி மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தை ம... மேலும் பார்க்க

திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

ஆந்திரம் மாநிலம், திருமலை திருப்பதி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க. ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை நியாய விலைக் கடைகள் செயல்படும்

சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜன.10) வெள்ளிக் கிழமை அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்ப... மேலும் பார்க்க

தேர்தல் வரும்போது பொங்கல் பரிசுத் தொகை: துரைமுருகன் சுவாரஸ்யம்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகை குறித்து பேரவையில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தருவது பற்றி பார்க்கலாம் என்று நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.இதனால், சட்டப்ப... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் தொகுப்பு விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை.ஈரோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து, அந்த த... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசியால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் மையப்பகுதியான கொக்கிரகுளம் பகுதியில்... மேலும் பார்க்க