இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் பற்றி தெரியுமா?
மத்தியப் பிரதேசத்தின் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) கீழ் இயக்கப்படும் இந்தியாவின் முதல் தனியார் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த நிலையம் தனியார் நிறுவனத்தால் இயக்கப்பட்டு பராமரிக்கப்பட்டாலும், உரிமை இந்திய ரயில்வேயிடமே உள்ளது. தனியார் ஏன் நிர்வகிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்,
சர்வதேச அளவில் ரயில் நிலையங்களை மாற்ற தனியாரின் உதவிகளும் பெறப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே ஸ்டேஷன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் எட்டு ரயில் நிலையங்களை புதுப்பித்து வருகிறது. சண்டிகர், போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச், புனேவில் உள்ள சிவாஜி நகர், புதுடெல்லியில் பிஜ்வாசன் மற்றும் ஆனந்த் விஹார், குஜராத்தில் சூரத், பஞ்சாபில் எஸ்ஏஎஸ் நகர் (மொஹாலி) மற்றும் குஜராத்தில் காந்தி நகர் ஆகியவை இதில் அடங்கும்.
மத்தியப் பிரதேச மாநிலம் தலைநகர் போபாலின் ஹபீப்கஞ்சில் அமைந்துள்ள ரயில் நிலையம், பொதுமக்களுக்காக திறக்கப்பட்டு,நாட்டின் முதல் தனியார் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டுக் கழகத்தின் படி, இந்த ரயில் நிலையம் தனியார் பங்களிப்புடன் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையம் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இங்கு ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள் உள்ளன. மேலும் இந்த நிலையம் முற்றிலும் சூரிய சக்தியாலேயே இயங்குகிறது. ஓய்வு அறைகள் மற்றும் தங்குமிடங்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன.
2021 ஆம் ஆண்டில், ஹபீப்கஞ்ச் நிலையம் ராணி கமலாபதி நிலையம் என மறுபெயரிடப்பட்டது. போபாலின் கடைசி இந்து ராணியாக இருந்த ராணி கமலாபதியின் நினைவாக இந்த ரயில் நிலையம் பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.