செய்திகள் :

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: சௌரவ் கங்குலி கூறுவதென்ன?

post image

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது. மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.

இதையும் படிக்க: விராட் கோலியை சீண்டி விடாதீர்கள்; ஆஸி. வீரர்களுக்கு ஷேன் வாட்சன் அறிவுரை!

சௌரவ் கங்குலி கூறுவதென்ன?

பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியிலிருந்து ஷுப்மன் கில் விலகியுள்ளது அணிக்கு மிகப் பெரிய இழப்பு என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஃபார்மில் உள்ள ஷுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளது இந்திய அணிக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அவர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட டெஸ்ட் தொடர் தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.

இதையும் படிக்க: தக்கவைப்பு தொகையில் உடன்பாடின்றி வெளியேறினேனா? திட்டவட்டமாக மறுத்த ரிஷப் பந்த்!

வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இரண்டு பிரதான சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடி பயனில்லை. முதல் இரண்டு போட்டிகளில் நிதீஷ் ரெட்டியை பயன்படுத்தலாம். அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர். முதல் இரண்டு போட்டிகளில் அவர் அணியில் சேர்க்கப்படுவது அணி சமபலத்துடன் இருப்பதை உறுதி செய்யும் என்றார்.

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து!

இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை - நியூசிலாந்து கடைசி ஒருநாள் போட்டி இலங்கையில் பல்லெகலேயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்... மேலும் பார்க்க

நடத்தை விதிகளை மீறிய தெ.ஆ. பந்துவீச்சாளருக்கு அபராதம்!

ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு தெரிவித்ததற்காக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்; ஆஸி.க்கு எதிரான தோல்வி காரணமா?

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷாகித் அஸ்லாம் நியமிக்கப்பட்டுள்ளார்.முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் க... மேலும் பார்க்க

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பிய தெ.ஆ. கேப்டன்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வங்கதேசத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் 2-0 என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்க அணி இலங்க... மேலும் பார்க்க

விராட் கோலியை சீண்டி விடாதீர்கள்; ஆஸி. வீரர்களுக்கு ஷேன் வாட்சன் அறிவுரை!

பார்டர் - கவாஸ்கர் தொடரில் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட வேண்டாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அறிவுரை கூறியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்க... மேலும் பார்க்க

உலகக் கோப்பை தோல்வி..! இந்திய ரசிகர்கள் சோகம்!

ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று ஓராண்டு நிறைவையொட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் இறுதிப... மேலும் பார்க்க