இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராகும் அப்போல்லோ டயர்ஸ்!
இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக டிரீம் 11 நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்தது. அண்மையில், இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இதன் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ஸ்பான்சரின்றி விளையாடி வருகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக அப்போல்லோ டயர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அப்போல்லோ டயர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் என்றார்.
Apollo Tyres has joined as the new jersey sponsor of the Indian team.
இதையும் படிக்க: பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!