Guar: இந்தியா உற்பத்தி செய்யும் கொத்தவரங்காய்க்கு அமெரிக்காவில் டிமாண்ட்; எதற்கு...
இந்திய பங்குச் சந்தையில் நுழைகிறது ஜியோ! முகேஷ் அம்பானி அறிவிப்பு
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில் இந்திய பங்குச் சந்தையில் நுழையவிருப்பதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, முதல் முறையாக மக்களுக்கு அதன் நிறுவன பங்குகளை பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. வரும் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில், ஜியோ பங்குகள் ஐபிஓ செய்யப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறியிருக்கிறார்.
ஒரு நிறுவனம், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளவதே ஐபிஓ எனப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனம் தனது பங்குகளை மக்கள் வாங்கும் வகையில் பங்குச் சந்தையில் பட்டியலிடுகிறது
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் 48வது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, பங்குதாரர்களுக்கு இடையே உரையாற்றினார். அப்போது பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.