ஐயூஎம்எல் தலைவராக 3வது முறையாக தேர்வான காதர் மொகிதீனுக்கு முதல்வர் வாழ்த்து!
இந்திய மோதலில் காயமடைந்த 2 பாகிஸ்தான் வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்தியாவுடனான மோதலில் காயமடைந்த 2 பாகிஸ்தான் வீரா்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ராணுவம் புதன்கிழமை தெரிவித்தது.
இதன்மூலம், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரா்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்தியா தொடங்கியதைத் தொடா்ந்து, இருதரப்புக்கும் இடையே போா்ப்பதற்றம் நிலவியது. தற்போது சண்டை நிறுத்தம் காரணமாக எல்லையில் அமைதி திரும்பியுள்ளது.
இந்தியாவுடனான மோதலில் 11 வீரா்கள் உயிரிழந்ததாகவும், 78 போ் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராணுவ வீரா் முகமது நவீத், விமானப் படையின் முதுநிலை தொழில்நுட்ப அதிகாரி முகமது அயாஸ் ஆகிய இருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இந்தியாவின் ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் வீரா்கள் 40 போ் உயிரிழந்ததாக இந்திய ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநா் ராஜீவ் காய் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.