செய்திகள் :

இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக முடிவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 10 காசுகள் உயர்ந்து ரூ.87.21 ஆக நிலைபெற்றது.

அமெரிக்காவில் மந்தநிலை மற்றும் வர்த்தகம் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஒரு நிலையற்ற போக்கு மற்றும் அந்நிய மூலதனம் தொடர்ந்து வெளியேற்றம் ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மீட்சியைக் இது கட்டுப்படுத்தியதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.87.37 ஆக தொடங்கி, வர்த்தக அமர்வின் போது, ​​டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ரூ.87.39 ஆகக் குறைந்தது, இதனையடுத்து மத்திய நேர வர்த்தகத்தில் இது ரூ.87.17 ஆக உயர்ந்தும், வர்த்தக நேர முடிவில் 10 காசுகள் சரிந்து ரூ.87.21 ஆக நிலைபெற்றது.

நேற்று (திங்கள்கிழமை) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 காசுகள் சரிந்து ரூ.87.31 ஆக இருந்தது.

இதையும் படிக்க: மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவு!

மும்பை: கட்டண நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.87.19 ஆக முடிவடைந்தது.கச்சா எண்ணெய் விலை ஏற்றம், உள்நாட்டு பங்குகள் தொடர்ந்து விற்... மேலும் பார்க்க

ஆரம்பத்தில் உயர்ந்தும், முடிவில் சரிந்து முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இன்றைய வர்த்த தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்த நிலையில், வர்த்தக கட்டணங்கள் குறித்த உலகளாவிய போக்குகள் காரணமாக முடிவில் நேற்றைய அமர்வை விட சர... மேலும் பார்க்க

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சி! ஒரே நாளில் எலானுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு?

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் கடும் சரிவைச் சந்தித்தன. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சரிந்துள்ளது.அமெரிக்கத் தொழிலதிபருக்குச் சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் மதிப்... மேலும் பார்க்க

எலான் மஸ்க் நிறுவனத்துடன் ஜியோ ஒப்பந்தம்!

ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ நிறுவனமும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், ... மேலும் பார்க்க

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

பிரிட்டனைச் சோ்ந்த சா்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளா்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன... மேலும் பார்க்க

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க