செய்திகள் :

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

post image

‘ஆக்ஸிம்-4’ மிஷனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் மனித விண்வெளிப் பயண சேவைகள் நிறுவனமான ‘ஆக்ஸிம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. சுக்லாவுடன் போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் விண்வெளிக்குப் பயணிக்கவிருந்தனர்.

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நேற்றிரவு பயணிக்கவிருந்தார். ‘டிராகன்’ விண்கலத்தில் 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு இன்று(ஜூன் 11) இரவு 10 மணியளவில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைவார் எனக் கணிக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக அவரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து இன்று மாலை 5.30 மணிக்கு மீண்டும் ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரின் விண்வெளிப் பயணம் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் -9 ராக்கெட்டில் கடைசி நேரத்தில் தீ பூஸ்டர் ஆய்வுகளின் போது திரவ ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டதால், அதனை சரிசெய்ய பொறியாளர்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுயிருக்கிறது.

அந்தப் பதிவில், “ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து ஆக்ஸிம்-4-ன் ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்படவிருந்த நிலையில், தீ பூஸ்டர் ஆய்வுகளின் போது திரவ ஆக்ஸிஜன் கசிவு கண்டறியப்பட்டதால், அதனை சரிசெய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கோளாறு சரிசெய்யப்பட்டதும், புதிய தேதியை விரைவில் அறிவிப்போம்” எனப் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கையில் தகவல்

போர் நிறுத்தம் ஏற்பு! இஸ்ரேலின் வான்வழி மீண்டும் திறப்பு!

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால், மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள்களாக நடைபெற்று வந்த போரானது நிறுத்தப்படுவதாக,... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

ஈரானுடனான போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாகவும் ஈரானுக்கு எதிராக அனைத்து போர் இலக்குகளையும் அடைந்துவிட்டதாகவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்கும் நோக்கில் ஈரா... மேலும் பார்க்க

கண்ணாமூச்சி ஆடும் ஈரான்-இஸ்ரேல்! இறங்கி அடித்துவிட்டு போர் நிறுத்தமா?

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் முடிவாகியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.இஸ்ரேல் -... மேலும் பார்க்க

போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்! - டிரம்ப்புக்கு நெதன்யாகு நன்றி

ஈரானுடனான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் தெரிவித்துள்ளது.இருநாடுகளும் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் பி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 2,200-ஐ கடந்தது!

ஆபரேஷன் சிந்து மீட்புத் திட்டத்தின் மூலம் ஈரான் நாட்டில் சிக்கியிருந்த 292 இந்தியர்கள் இன்று (ஜூன் 24) காலை தாயகம் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இருநாடுக... மேலும் பார்க்க

ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேல் வான்வழித் தடம் மூடல்!

இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அந்நாட்டின் வான்வழிப் பாதை முழுவதுமாக மூடப்பட்டு அனைத்து வகையான பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஈ... மேலும் பார்க்க