செய்திகள் :

`இந்து கடைகளில் பொருட்கள் வாங்குங்கள்’ - எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு; விளக்கம் கேட்கும் அஜித் பவார்

post image

மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முழு அளவில் தயாராகி வருகின்றனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ சங்க்ராம் ஜக்தாப் தீபாவளிக்கான பொருட்களை இந்துகள் நடத்தும் கடைகளில் இருந்து வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அகில்யாநகரை சேர்ந்த சங்க்ராம் ஜக்தாப் சோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ''தீபாவளிக்கு ஷாப்பிங் செய்யும்போது நமது பணம், பரிவர்த்தனை, பயன்கள் இந்துக்களை சென்றடைய வேண்டும் என்று அனைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உடனே ஜக்தாப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அதோடு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து அஜித் பவார் அளித்த பேட்டியில், "எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடும் எந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி.யையும் கட்சி ஏற்றுக்கொள்ளாது.

அஜித் பவார்

மகாராஷ்டிரா சத்ரபதி சிவாஜி, சத்ரபதி ஷாஹு மகாராஜ் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரின் பூமி, அனைவரையும் அரவனைத்து செல்லக்கூடியது'' என்று குறிப்பிட்டார்.

நேற்று புனேவில் மீண்டும் சர்ச்சைக்கு பதிலளித்த அஜித் பவார், "எம்.எல்.ஏ. நோட்டீஸுக்கு பதிலளித்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கட்சி உறுப்பினர் கட்சிக் கொள்கைக்கு எதிராகப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது" என்றார். இப்பிரசனை குறித்து அஜித் பவாரிடம் பேசுவேன் என்று சங்க்ராம் தெரிவித்தார். சங்க்ராமை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்று சுப்ரியா சுலே எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.எல்.ஏ.ஜக்தாப் சர்ச்சையாக பேசுவது இது ஒன்றும் முதல்முறை கிடையாது. கடந்த ஜூன் மாதமும் முஸ்லிம்களுக்கு எதிராக பேசி இருந்தார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணியில் இருந்தாலும் தொடர்ந்து மதசார்பர்ற கட்சி என்ற அந்தஸ்தை பின்பற்ற முயன்று வருகிறது.

கிருஷ்ணகிரி: "எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்" - திறக்கப்படாத தினசரி சந்தை; குமுறும் வியாபாரிகள்!

கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டையில், நகராட்சி சார்பில் செயல்பட்டுவந்த தினசரி காய்கறி சந்தை வளாகத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-2024 ஆம் நிதியாண்டின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 77 புத... மேலும் பார்க்க

பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - எம்எல்ஏ அருள்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வா... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``காவல்துறையினர் ஏன் எங்களை வரவேற்றனர்?'' - ஆதவ் அர்ஜுனா கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பயணத்தை மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழ... மேலும் பார்க்க

கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ - உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்... மேலும் பார்க்க

கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவு

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது 41 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.இதில் பாதிக்கப்பட்டவர்க... மேலும் பார்க்க

``மத்திய அமைச்சரானதால் வருமானம் நின்றுவிட்டது'' - பதவியிலிருந்து நீக்க கோரிக்கை வைத்த சுரேஷ் கோபி

சதானந்தன் மாஸ்டர்கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சதானந்தன் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் சி.பி.எம் நிர்வாகியாக இருந்தார் சதானந்தன் மாஸ்டர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் நிர்வாகிகளால் தாக்குதலுக... மேலும் பார்க்க