செய்திகள் :

இந்தோனேசியா: பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்!

post image

இந்தோனேசியாவில் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28 மில்லியன் டாலர்கள் செலவில் நாடு முழுவதும் திங்கள்கிழமை(ஜன. 6) இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், சுமார் 90 மில்லியன் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவினரின் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் இத்திட்டத்தால் 19.47 மில்லியன் பள்ளி குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பயனடைவர் என்று இந்தோனேசிய அரசு கணித்துள்ளது. இதற்காக 2025-26 நிதியாண்டில் 4.3 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கடந்தாண்டு தேர்தல் வாக்குறுதியாக, இலவசமாக ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தோனேசியாவில் 5 வயதுக்குட்பட்ட 21.5 சதவிகித குழந்தைகளின் முறையான வளர்ச்சி பாதிப்படையக்கூடாது என்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர்கள் விளைவிக்கும் பயிர்களின் மதிப்பும் உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

282 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்டுள்ள இந்தோனேசியா, தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இந்த நிலையில், அங்கு நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்துவது எந்தளவுக்கு சாத்தியம் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதனிடையே, பிரபோவோ சுபியாந்தோ கடந்தாண்டு அக்டோபரில் அதிபராகப் பதவியேற்றபின் பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தோனேஷியாவுக்கு நிதியுதவியை பெற நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அந்த வகையில், சீனாவுடன் 10 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் கடந்த நவம்பர் மாதம் உடன்படிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரீன்லாந்து மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை? டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்புக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கிரீன்லாந்து’ தீவு விவகாரத்தில் அமெ... மேலும் பார்க்க

கனடாவின் அடுத்த பிரதமர் ஒரு தமிழ்ப் பெண்!! யார் இவர்?

கனடாவின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 57) தேர்வாக வாய்ப்புள்ளது.தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர்,... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவின் விசாவை நீட்டித்தது இந்தியா

வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, நாடு நடத்துமாறு வங்கதேசத்திலிருந்து வலியுறுத்தப்படும் நிலையில், அவரது விசா காலத்தை இந்தியா நீட்டித்துள்ளது. மேலும் பார்க்க

டிரம்ப் பதவியேற்கும்போது அரைக் கம்பத்தில் கொடி பறக்கும்! ஏன்?

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அதிபராகப் பதவியேற்கும்போது, அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்துகொண்டிருக்கும்.முன்னாள் அமெரிக்க அதிபர், மறைந... மேலும் பார்க்க

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை: ஜஸ்டின் ட்ரூடோ!

கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என்று கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ராணுவ மற்றும் வர்த்தக ஏ... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 30,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டுத் தீ லாஸ் ஏஞ்சலஸின் மலைப்பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிற... மேலும் பார்க்க