Womens World Cup: அரையிறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் என்ன நடக்கும்; விதிக...
"இந்த மாதிரி எனக்கு நடக்கனும்னு ஆசைதான்; ஆனால்!" - மனைவியின் கேள்விக்கு ரியோ கலகல பதில்
அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆண்பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர் ஜே விக்னேஷ் காந்த் , ஷீலா, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டார் மிஷ்கின்.

இதில் பேசியிருக்கும் ரியோ, "சிவா இந்தக் கதையை ரொம்ப அழகா எழுதியிருக்கிறார். கலையரசன் தங்கவேல் மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார். இந்தப் படம் நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்" என்று படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
ரியோ மனைவி ஸ்ருதி: `நீ நடிச்சதுல உனக்குப் பிடிச்ச ஹீரோயின் யார்?’
ரியோ: `நான் நடிச்சதுல எனக்குப் பிடிச்ச ஹீரோயின் மாளவிகா’

ரியோ மனைவி ஸ்ருதி: `பொய் சொல்லிட்டு நண்பர்கள்கூட எங்கையாவது போயிருக்கியா?’
ரியோ: `இந்த மாதிரி எனக்கு நடக்கனும்னு ஆசைதான். ஆனால் இதுவரைக்கும் அப்படி நான் பொய் சொல்லிட்டு எங்கையும் போனதில்லை. என்கூட இருக்க நண்பர்களே நா எங்க இருக்கேனு ஸ்ருதிகிட்ட போட்டு கொடுத்துருவாங்க.’

















