முதல்வரின் ஒப்புதலுடன்தான் மாவட்டச் செயலாளர், அதிகாரிகளை மிரட்டினாரா? - அன்புமணி...
``இனியும் அவர்களின் வெற்றியை 'அப்செட்' என சொல்லாதீர்கள்!" - ஆப்கானிஸ்தான் அணியைப் பாராட்டும் சச்சின்
ஐசிசி 2025 சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற (பிப்ரவரி 26) போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. சமீபமாக ஆப்கானிஸ்தான் தங்களுடைய திறமையால் ஐசிசி தொடர்களில் அபாரமாக விளையாடி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை சச்சின் பாராட்டி இருக்கிறார்.

``சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக தொடர்ச்சியாக எழுச்சி கண்டு வருவது உத்வேகத்தைக் கொடுக்கிறது. இனிமேலும் அவர்கள் பெறும் வெற்றிகளை அப்செட் என்று உங்களால் சொல்ல முடியாது. ஏனெனில், அவர்கள் அப்படி வெற்றி பெறுவதை வழக்கமாக்கிவிட்டார்கள்.

நேற்றையப் போட்டியில் இப்ராஹிம் சூப்பராக சதமடித்தார். ஓமர்சாய் அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் எடுத்து ஆப்கானிஸ்தானுக்கு என்றைக்கும் நினைவில் நிற்கும் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். ஆப்கனிஸ்தான் வீரர்கள் நன்றாக விளையாடினார்கள்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...